சிவகாசி ஸ்பார்க்கலர் ரோட்டரி சங்கமும், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் ரோட்டரி சங்கமும்
திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து செவல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வைத்து 8வது இலவச கண் சிகிச்சை முகாமை 7/11/2021 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 2 மணி வரை மிகச் சிறப்பாக நடத்தனார்கள்.
இந்த முகாமிற்கு 115 நபர்கள் வந்திருந்தனர் அவர்களில் 45 நபர்கள் கண்புரை அறுவை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். இரண்டு சங்கங்களில் இருந்து தலைவர்கள் செயலாளர்கள் திட்ட இயக்குனர்கள் கலந்து கொண்டனர். 2 மருத்துவர்கள், 14 மருத்துவ பணியாளர்கள், 10 பள்ளி மாணவர்கள், 2 ஆசிரியர்கள் இணைந்து இத்திட்டத்திற்கு வெற்றி தேடித் தந்தனர்.