ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி அளவில் திருநெல்வேலி மாதா மாளிகையில் வைத்து மிகப் பிரம்மாண்டமாய் நடைபெற்ற மாவட்டம் 3212 காண விருதுகள் வழங்கும் விழாவில் நமது சங்கம் சார்பாக இருபத்திமூன்று உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் Rtn. கமல்நாத் அவர்கள் ஒரே வண்ணத்தில் சட்டை கொடுத்து சிறப்பித்தார். தலைவர் அவர்கள், உறுப்பினர்கள் அனைவருடைய பதிவு மற்றும் தங்கும் வசதி அனைத்தையும் பொறுப்பு எடுத்து கொண்டார். விருதுகள் வழங்கும் விழா சேர்மன் Rtn. Major Donor. அருள் செழியன் Ovation என்ற தலைப்பில் மிகப்பிரம்மாண்டமாக மதியம் 3 மணியளவில் இந்நிகழ்ச்சியை ஆரம்பித்தார். ஆரம்பிக்கப்பட்ட முதலிருந்தே இந்நிகழ்ச்சியில் உறுப்பினர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் எதிர்பார்ப்புடன் பங்கேற்றனர். விழாவில் நமது சங்கத்திற்கு பிளாட்டினம் கிளப் - Zone 26, சிறந்த தலைவர், சிறந்த செகரட்டரி, துணை ஆளுநர் அவார்டும் மேடையில் சிறப்பு விருந்தினர் மற்றும் மாவட்ட ஆளுநர் முன் கொடுக்கப்பட்டது. எண்ணற்ற மலரும் நினைவுகளுடன் நீங்கா நினைவுகளுடன் மகிழ்ச்சியுடன் இந்த வெற்றியை நமது சங்க உறுப்பினர்கள் தலைவர் மற்றும் செயலாளர் உடன் கொண்டாடினார்கள்.