சங்கத்தின் 12வது புதிய தலைவர் மற்றும் ஆட்சி குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா.
ஜூலை 3.2023 திங்கள்கிழமை அன்று மாலை 7 மணி அளவில் சிவகாசி ரோட்டரி ஸ்பார்க்களர் ஹாலில் வைத்து சங்கத்தின் 12 ஆவது புதிய தலைவராக Rtn. நந்தகோபாலன், செயலாளராக Rtn. கோவிந்த் மற்றும் ஆட்சி குழு உறுப்பினர்கள் பதவி ஏற்று கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆளுநர் தேர்வு Rtn. Major Donor. மீராக்கான் சலீம் அவர்கள் கலந்து கொண்டு பதவி பிரமாணம் செய்து வைத்து சிறப்புரை ஆற்றினார். துணை ஆளுனர் Rtn. எட்வின் ஜேம்ஸ் அவர்கள் புதிய சங்கத்திற்கு புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார். சங்கத்தின் சாட்டர்டே பட்டய தலைவர் ரவீந்திரன் அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது. சங்கத்தின் மின் வார இதழ் வெளியிடப்பட்டது. ரூபாய் 40 ஆயிரம் மதிப்புள்ள பல்வேறு நலத்திட்டங்களும் திறமையானவர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. உறுப்பினர்கள் குடும்பத்தாருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சிவகாசி நகரில் உள்ள அனைத்து ரோட்டரி சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். செயலாளர் நன்றியுரைக்குப்பின் தேசிய கீதம் இசைக்கப்பட்டு, மீட்டிங் இனிதே முடிவடைந்தது.