நமது சங்கத்தின் சிறப்பான சேவை திட்டங்களில் இலவச கண் சிகிச்சை முகாமும் ஒன்று. 30/07/2023, ஞாயிற்றுக்கிழமை அன்று செவல்பட்டியில் நமது சங்கம் மற்றும் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக நடைபெற்ற 12 வது இலவச கண்புரை பரிசோதனை முகாம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இம் முகாம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செவல் பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. முகாமிற்கு செவல்பட்டியை சுற்றியிருக்கும் 25 கிராமங்களில் இருந்து 111 பயனாளிகள் பரிசோதனை செய்து கொண்டு, அவர்களில் 33 பேருக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டதில் உடல் குறைபாடு காரணமாக 10 பேர்கள் நிராகரிக்கப்பட்டு மீதமுள்ள 23 பேர்கள் அறுவை சிகிச்சைக்கு கோவில்பட்டியில் உள்ள அரவிந்த் மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். இம்முகாமிற்கு வருகை புரிந்து சிறப்பாக செயல்பட்ட நமது சங்க தலைவர் Rtn.Nanda Gopalan, செயலாளர் Rtn.Govindaraj, துணை ஆளுநர் Rtn.Edwin James, திட்ட இயக்குனர் Rtn. ரமேஷ் குமார், Rtn. Mathavan, Rtn.Selvaraj மற்றும் புதிய மெம்பர் Rtn.Somnath ஆகியோரை மனமார பாராட்டி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் நிகழ்ச்சிற்கு வர இயலாவிட்டாலும் தக்க ஆலோசனைகள் வழங்கி மெருகூட்டிய முன்னாள் சங்க தலைவர் Rtn.T.Subramanian அண்ணாவிற்கும் நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்நிகழ்ச்சிற்கு Donation வழங்கிய அனைத்து உறுப்பினர் நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.