2023, ஆகஸ்ட் 6 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சிவகாசி விருதுநகர் ரோட்டில் அமைந்துள்ள பசுமையான தோட்டத்தில் பட்டைய தலைவர் Rtn. PAG. ரவீந்திரன் அவர்களின் விருந்தோம்பலில் குதூகலமான குடும்ப சந்திப்பு நடைபெற்றது.
உறுப்பினர்கள் அவர்தம் குடும்பத்துடன், குழந்தைகளுடனும் பங்கு பெற்று அங்குள்ள நீச்சல் குளத்தில் நீராடி மகிழ்ந்தும், விளையாட்டுப் போட்டியை விளையாண்டும் மகிழ்ந்தனர். அதன் பின் பட்டய தலைவர் அவர்களின் விருந்தோம்பலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறுசுவை உணவு உண்டபின் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி அளவில் நிகழ்ச்சி இனிதே முடிவு பெற்றது. நிகழ்ச்சியில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. புதிய உறுப்பினர்கள் உள்பட மொத்தம் 30 உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டு இருந்தனர்.