சிவகாசி ரோட்டரி ஸ்பார்க்ளர் சங்கம் சார்பாக சுதந்திர தினம் எம். புதுப்பட்டி கிராமத்தில் அரசு பள்ளியில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
காலை 8.30 மணி அளவில் அங்குள்ள அரசு பள்ளியில் கிராமத் தலைவர் முன்னிலைபிலும், நமது சங்க உறுப்பினர்கள் மத்தியிலும் சங்கத் தலைவர் நந்தகோபாலன் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி பள்ளிக்கு தேவையான மூன்று ஆசிரியர் டேபிள்களை சங்கம் சார்பாக வழங்கினார். 100 மாணவர்களுக்கு ஜாமென்ட்ரி பாக்ஸ் வழங்கியும் சிறப்பு செய்தார். இந்நிகழ்ச்சியே சங்க உறுப்பினர் ஞானப்பிரகாசம் அவர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.