சிவகாசி எம் புதுப்பட்டியில் வைத்து நமது சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக நடைபெற்ற 13 வது இலவச கண் சிகிச்சை முகாம் மிகச் சிறப்பாக 3/09/2023 அன்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
எம். புதுப்பட்டியில் உள்ள டார்லிங் செல்லத்துரை மண்டபத்தில் வைத்து திட்ட இயக்குனர் Rtn. ஞானப்பிரகாசம் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்ற இம் முகாமில் எம் புதுப்பட்டி சுற்று வட்டார பொதுமக்கள் 60 பேர் வரை வந்து கண் பரிசோதனை செய்து கொண்டனர்.
அதில் 10 பேர் கண் புறை அறுவை சிகிச்சைக்காக ஞாயிற்றுக்கிழமை அன்று மதுரை அரவிந்த் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு திங்கள், செவ்வாய் இரண்டு நாட்களில் அறுவை சிகிச்சை முடிந்து நலமாக வீடு திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்டது. இம் முகாமிற்கு தலைவர் Rtn. PHF. M. R. நந்த கோபாலன், சங்க உறுப்பினர்கள் திரளாகவும் துணை ஆளுநர் எட்வின் ஜேம்ஸ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.