செப்டம்பர் மாதத்திற்கான நமது சங்க பிஸ்னஸ் மீட்டிங் திங்கள் கிழமை இரவு 8 மணி அளவில் ரோட்டரி ஸ்பார்குலர் சொசைட்டி ஹாலில் வைத்து நடைபெற்றது.
மீட்டிங்கில் தலைவர் வரவேற்க செயலாளர் செப்டம்பர் மாத ஆட்சி குழு மினிட்சை வாசித்தபின் அனைத்து சேர்மன்களும் ரிப்போர்ட் கொடுத்தனர். பொருளாளர் சர்வதேச ரோட்டரி சந்தாவை செலுத்திய விவரத்தை தெரிவித்தார். 2024-25 ஆம் ஆண்டு நமது சங்கத்தின் புதிய தலைவருக்கான தேர்வு பற்றிய விவரம் பட்டய தலைவர் ரவீந்திரன் அவர்கள் எலக்சன் ஆபீஸராக நியமிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.
முந்திய வாரத்தில் நடந்த கண் சிகிச்சை முகாமிற்கு உதவி செய்த உறுப்பினர்களுக்கு திட்ட இயக்குனர் ரமேஷ் குமார் நினைவு பரிசினை வழங்கினார். Drona திட்ட இயக்குனர் Rtn. சோமநாத் அவர்கள் திட்டத்தை விரிவாக விளக்கினார். RYLA திட்டத்தைப் பற்றி திட்ட இயக்குனர் Rtn. குமரேசன் அவர்களும் விளக்கி கூறினார். பனை விதை சிவகாசி சின்னகுளம் பகுதியில் நடவு பற்றி புதிய உறுப்பினர் Rtm. காளிதாஸ் அவர்கள் எடுத்துரைத்தார். செயலாளர் நன்றி உரைக்குப்பின் தேசிய கீதம் இசைக்கப்பட்டு மீட்டிங் இரவு உணவுடன் இனிதே முடிவடைந்தது.