Virudhunagar District Handball Tournament
ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி ஸ்பார்களர் மற்றும் சிவகாசி ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்திய விருதுநகர் மாவட்ட அளவிலான கல்வி நிறுவனங்களுக்கு இடையே ஆன மாணவ மாணவியர்கள் காண sparklers Trophy - 2023 ஹேண்ட்பால் போட்டிகள் சிவகாசி ஜேசிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் சிவகாசி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் அணியில் 12 அணியும், மாணவியர்கள் அணியில் 8 அணியும் கலந்து கொண்டனர். துவக்க விழாவில் விருதுநகர் மாவட்ட ஹேண்ட்பால் சங்கத்தின் தலைவர் சண்முகநாதன் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி ஸ்பார்களர் தலைவர் Rtn. M.R. நந்தகோபாலன் தலைமை தாங்கினார், சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி இன் துணை ஆளுநர் Rtn. PHF. எட்வின் ஜேம்ஸ் மற்றும் விருதுநகர் மாவட்ட ஹேண்ட்பால் சங்கத்தின் செயலாளர் Rtn. PAG. உமா மகேஸ்வரன் மற்றும் விருதுநகர் மாவட்ட ஹேண்ட்பால் சங்கத்தின் துணைத் தலைவர் Rtn. PAG. சண்முக நடராஜ் மற்றும் பள்ளியின் முதல்வர் திருமதி சித்ரா ஜெயந்தி அவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் பிரிவில் அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முதலிடமும் , விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடமும், மெப்கோ பொறியியல் கல்லூரி, PSR கல்வி நிறுவனம் மூன்றாமிடமும் பெற்றனர். மாணவியர்கள் பிரிவில் அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முதலிடமும், ராஜபாளையம் சின்மயா வித்யாலயா பள்ளி இரண்டாம் இடமும் திருவில்லிபுத்தூர் M N R D பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் YRTV மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மூன்றாம் இடமும் பெற்றனர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சிவகாசி யூனியன் சேர்மன் திரு. விவேகன் ராஜ் அவர்கள் பரிசுகளை வழங்கினார். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை சிவகாசி ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ஸ்ரீதர் செயலாளர் சரவண பிரகாஷ் அவர்களுடன் இனைந்து திட்ட இயக்குனர் Rtn. மணிவண்ணன் அவர்கள் ஸ்பார்களர் ரோட்டரி கிளப் சார்பாக மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.