நமது சங்கமும் திருநெல்வேலி SEED அறக்கட்டளையும் இணைந்து நடத்திய இலவச பொது சித்த மருத்துவ முகாம் சிவகாசி திருத்தங்கல் சரவணா எம்பாசி கல்யாண மண்டபத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை 17/09/2023 அன்று காலை 9.30 முதல் மாலை இரண்டு மணி வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
128 பயனாளிகள் பங்கு பெற்ற இந்த முகாமில் திருநெல்வேலி சீட் அறக்கட்டளையில் இருந்து 18 டாக்டர்களும், நமது சங்கத்திலிருந்து தலைவர் துணை ஆளுநர் உட்பட 18 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். வந்த பயனளிகள் அனைவருக்கும் உடல் எடை, ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டு அதன் பின் அவர்களுடைய உடல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு இலவச மருந்துகளும், தைலங்களும் கொடுக்கப் பட்டது.
இம்முகாம்மிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிற்றுண்டி இலவச மூலிகை சூப், கேப்பை கூழ் மற்றும் நிலவேம்பு கசாயம் ஆகியவற்றை பயனாளிகளும் அனைவரும் அருந்தி மகிழ்ந்தனர். உறுப்பினர்கள் பெரும் அளவு நிதி உதவியும், முன்னாள் தலைவர் மாதவன் அவர்கள் இடவசதி அளித்து உதவி புரிந்திருந்தார்கள்.