நமது சங்க சொசைட்டி ஹாலில் வைத்து பெண்களுக்கான விசேஷத்திற்கு சேலை அணிதல் பற்றிய பிரத்தியோக பயிற்சி திட்ட இயக்குனர் Rtn. சோம்நாத் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு 15/09/2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது. சங்கத்தின் முதல் பெண்மணி Rotary Ann காஞ்சனா தேவி அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், விருதுநகர் பேஷன் டிசைனர் திருமதி வைஷாலி அவர்கள் பயிற்சியாளராகவும், Rtn. சோம்நாத் அவர்கள் திட்ட இயக்குனராகவும் பங்கேற்று இந்த நிகழ்ச்சியை சிறப்புற ஆரம்பித்து வைத்தார்கள்.
சுமார் 50 பெண்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பெண்களுக்கு சேலை அணிவித்தலில் உள்ள பல நுட்பங்களையும் அதன் மூலம் அவர்கள் தனியாக தொழில் தொடங்க வாய்ப்புகளையும் விளக்கி கூறப்பட்டது.
அச்சமயம் சிவகாசி தபால் நிலையத்தில் பணிபுரியும் நான்கு பெண்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.