நமது சங்கம் சார்பாக உறுப்பினர்களின் குடும்பத்தினருக்காக கேரளா டுர் செப்டம்பர் 30 அக்டோபர் 1 2 விடுமுறை நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டுருந்த்து.
செப்டம்பர் 30 சனிக்கிழமை காலை 5 மணி அளவில் சிவகாசி இலிருந்து பேருந்து மூலம் 51 பேரும் கார் மூலம் 10 பேரும் கேரளாவிற்கு கொல்லம் அருகில் உள்ள பரவுர் எரியுடன் இணைந்து Fragrance Nature என்ற ரிசர்ட்க்கு அனைவரும் சென்றடைந்தனர். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அங்குள்ள ஏரியில் படகு சவாரியும் ரிசார்ட்டில் உள்ள இயற்கை அழகையும் ரசித்தனர். காலை முதல் மாலை வரை அனைவருக்கும் அறுசுவை உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்பின் அனைவரும் கேரளாவின் முக்கிய கடற்கரை சுற்றுலாத்தலமான வர்கலா நோக்கி பயணித்தனர் அங்குள்ள ரிசார்ட் தங்கிய பின்னர் அங்கு கடற்கரையில் உலாவி மகிழ்ந்தனர். அங்குள்ள நீச்சல் குளத்தில் உறுப்பினர்களின் குடும்பத்தினர்கள் மிகவும் சந்தோஷத்துடன் உங்களுக்கு மகிழ்ந்தனர்
அதன் பின் கடற்கரையிலும் குளித்து மகிழ்ந்தனர். அக்டோபர் இரண்டாம் தேதி மாலை 3 மணி அளவில் சுற்றுலாவிற்கு ஏற்பட்ட நீங்க நினைவுகளுடன் கேரளாவில் இருந்து சிவகாசிக்கு இரவு 11 மணி அளவில் வந்து சேர்ந்தார்கள்.