Click to know upcoming events

RYLA – கல்லூரி மாணவர் மாணவிகளுக்கான பயிற்சி

Together Towards Tomorrow என்ற கருத்துடன் இந்த வருட RYLA வை Rotary Club of Sivakasi, Rotary Club of Sivakasi Sparkler, Rotary Club of Sivakasi Pyrocity என மூன்று சங்கங்கள் இணைந்து K.R. resorts, குற்றாலத்தில் செப்டம்பர் 22,23,24 ஏற்பாடு செய்திருந்தனர். இந்த பிரம்மாண்டமான பயிற்சி நிகழ்ச்சிக்கு 18 கல்லூரியில் இருந்து 82 மாணவர் மாணவிகள் கலந்து கொண்டார்கள்.
துவக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக Rtn. Major Donor. காந்தி அவர்களும், கௌரவவிருந்தனராக Rtñ. Major Donor. சண்முக நடராஜ் அவர்களும் சிறப்பு அழைப்பாளராக Rtn. Major Donor. ராஜகோபாலன் அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உற்சாகமான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். மூன்று சங்கத் தலைவர்களும் திட்ட இயக்குனர்களும் துணையாளுனர்கள் Rtn. எட்வின் ஜேம்ஸ் Rtn. மனோகரன் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.
வெள்ளிக்கிழமை சிறப்பான தொடக்கத்தை கொடுத்த இந்த பயிற்சி, சனிக்கிழமை சிறந்த பேச்சாளர்களை கொண்டு மாணவர்களுக்கு திறனாய்வு, பேச்சு திறமை, தலைமைப் பண்பு, குழுவாக இணைந்து பணியாற்றுதல் முதலிய பண்புகளை வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. இயற்கையான சூழலில் அமையப்பெற்ற அந்த இடத்தில் மாணவர்களுக்கு காலை மாலை இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன் பின் ஞாயிற்றுக்கிழமை Rtn. Somnath, JCI Zone Trainer அவர்கள் பன்னாட்டு ரோட்டரியின் 2023-24 theme ஆன Create Hope in the World என்ற தலைப்பில் மாணவர்களுக்கு ரோட்டரி பற்றியும் அவருடைய உலக சூழ்நிலை பற்றியும் தெளிவாகவும் அழகாகவும் விளக்கினார்.
அதன் பின் நடந்த நிறைவு விழாவில் Rtn. Majordonor. எபனெசர் பென்சாம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். இந் நிகழ்ச்சியில் சிறந்த மாணவர்கள் மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கினார். கல்லூரி மாணவர்கள் மறக்க முடியாத இந்த RYLA 2023 வை ரோட்டரி தலைவர்களுடன் இணைந்து குரூப் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.