27/11/2023 Venue: சரவணா எம்பாஸி திருமண மஹால், திருத்தங்கல்
மீட்டிங் சரியாக எட்டு மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. செயலாளர் Rtn.A. மாதவன் அவர்கள் ரோட்டரி இறை வணக்கம், ரோட்டரி நான்கு வழி சோதனை வாசித்தார். தலைவர் Rtn. M.R. ந ந் த கோபாலன் உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
2023, டிசம்பர் மாதம் 16, 17ம் தேதி நடைபெறும் முக்கிய திட்டங்களான 5 மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி பற்றி விவாதம் நடைபெற்றது. அதன் பின் ரோட்டரி மாவட்ட 3212 கருத்தரங்கு 2024, பிப்ரவரி 2, 3, 4 தேதிகளில் கொடைக்கானல் நடைபெறுகிறது. திட்ட இயக்குனர் President Elect Rtn. சிவப்பிரகாசம் பதிவு மற்றும் கொடைக்கானல் செல்லுதல் பற்றி விளக்கி கூறினர்.
டிசம்பர் 3ஆம் தேதி திருநெல்வேலி வைத்து நடைபெறும் ரோட்டரி பவுண்டேஷன் கருத்தரங்கு பற்றி Rtn. PP. சுப்ரமணியன் அவர்கள் விளக்கி கூறினார். அதன் பின் உறுப்பினர்கள் நமது ரோட்டரி ஸ்பார்களர் சொசைட்டி ஹால் பூட்டிய விவரம் பற்றியும் ரோட்டரி ஸ்பார்க்களர் சொசைட்டி தலைவர் Rtn. ASP அறுமுகசெல்வன் அவர்களின் செயல்பாடுகள் பற்றியும் விவாதித்தனர். டிசம்பர் 30ஆம் தேதி நடைபெறும் போர்டு மீட்டிங்கில் மிக முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என விவாதிக்கப்பட்டது. செயலாளர் நன்றியுரை கூற தேசிய கீதம் படிக்கப்பட்டு மீட்டிங் இரவு உணவு உடன் நிறைவு பெற்றது.