பிப்ரவரி மாதத்திற்கான குடும்ப சந்திப்பு 25/02/2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10 சங்க உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்துடன் ராஜபாளையம் அருகே உள்ள சாஸ்தா கோயில் செல்ல முடிவெடுத்திருந்தனர். இதற்கு திட்ட இயக்குனராக முன்னாள் துணை ஆளுநர் மாதவன் அவர்களின் விருந்தோம்பலில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு மாதவன் அவர்களுக்கு பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
சுமார் 70 பேர்கள் கலந்து கொண்ட இந்த சந்திப்பில் சாஸ்தா கோயில் ஆற்றில் அனைவரும் குளித்து மகிழ்ந்தனர். அதன் பின் அந்த பசுமையான சூழலில் அனைவருக்கும் அசைவ சைவ மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.