ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி பார்ட்னர் மற்றும் AAA இன்ஜினியரிங் & தொழில்நுட்ப கல்லூரி இணைந்து நடத்திய உலக தண்ணீர் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி மார்ச் 22 இன்று கல்லூரி வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
நிகழ்ச்சியை ரோட்டரி தலைவர் Rtn. PHF. T. சுப்பிரமணியன் அவர்கள் தொடங்கி வைத்தார். கல்லூரி கட்டிட பொறியியல் துறை தலைவர் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரண்டாம் ஆண்டு பொறியியல் துறை மாணவர்களுக்கு மழைநீர் கிரிதரன் மற்றும் இயற்கை உணவியல் நிபுணர் மாறன்ஜி அவர்கள் தண்ணீர் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி மழைநீர் சேகரிப்பு மாதிரி மூலம் விளக்க உரை நிகழ்த்தினர். மாணவ, மாணவியர்கள் கேட்ட சந்தேகத்திற்கு கிரிதரன் மற்றும் ஆரஞ்சு அவர்கள் மிக அழகாக பதிலளித்தனர்.
நிகழ்ச்சிக்கு சங்கத்தின் முன்னாள் தலைவர் துணை ஆளுநர் மற்றும் இதர நண்பர்கள் கலந்து கொண்டனர். பேச்சாளர்களுக்கு சால்வை அணிவித்தும், கல்லூரி ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முடிவில் ரோட்டரி சங்கத்தின் இருந்து செயலாளர் Rtn. M. R. நந்தகோபாலன் நன்றியுரை வழங்கினார்.